Wednesday, July 28, 2010

என்ன அழகு எத்தனை அழகு

படம்: லவ் டுடே


இசை: சிவா

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
 
என்ன அழகு எத்தனை அழகு


கோடி மலர்கள் கொட்டிய அழகு

இன்று எந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திர அழகு

சிறு நெஞ்சை கோதிய அழகு

இன்று எந்தன் தோள் சாய்ந்ததே



எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்

ஒரே சொல்லில் மனசை தைத்தாள்

சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்

நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்

நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

(என்ன அழகு..)



அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்

கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்

நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்ந்தித்தேன்

காற்றும் நிலவும் கடலுல்ம் அடி தீ கூட தித்தித்தேன்

மாணிக்க தேரே உன்னி மலர் கொண்டு பூசித்தேன்

என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்

இது போதுமே இது போதுமே

இனி என் கால்கள் வான் தொடுமே

(என்ன அழகு..)



நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்

உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்

நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்

வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்

இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்

கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்

மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

(என்ன அழகு..)

No comments:

Post a Comment