பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா - நீ
பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
(பூ)
குதிச்சு குதிச்சு ஓடி போகும்
குள்ள முயல் அண்ணா - நீ
குதிக்காதே கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒண்ணா
(பூ)
பாவாடை போல் தோகை விரிச்சு
புள்ளி மயிலே வாயேன் - என்
புத்தகதிலே குட்டி போடவே
பூஞ்சின்சிறகொண்ணு தாயேன்
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவி போகும் குரங்கே - நான்
பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடி வா
(பூ)
யானை குட்டி மாமா நீயும்
தும்பிக்கையை நேடு - உன்
முதுகின் மேலே குந்திக்க போறேன்
காட்டை சுத்தி காட்டு
மான் குட்டியே உன் உடம்பு முழுக்க
புள்ளி வச்சதாரு - நீ
துள்ளி ஓடின நான் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ
பட்டு சிவப்பா மூக்கு இருக்குற
பச்சை கிளியே பாரு - இந்த
பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிசு போடு
பூச்சி புழுவை கொட்ஜ்தி திங்கிற
ஒத்தை கண்ணு காக்கா - நீ
மறஞ்சிருக்குறே வடையை திருடி திங்கிறே
நாந்தான் பேச மாட்டேன் போ..
கா...
(பூ)
No comments:
Post a Comment