Friday, July 30, 2010

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே


போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே

உறவும் இல்லையே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே



சுதி சேரும் போது விதி மாறியதோ

அறியாத ஆடு வழி மாறியதோ

புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு

தங்கப் பூவே சந்திப்போமா

சந்தித்தாலும் சிந்திப்போமா

மாயம் தானா?



போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே



நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ

மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ

தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு

காதல் இங்கே வெட்டிப் பேச்சு

கண்ணீர்தானே மிச்சமாச்சு

பாசம் ஏது?



போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே

உறவும் இல்லையே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

No comments:

Post a Comment