Friday, July 30, 2010

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

பாடல்: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

திரைப்படம்: மரிக்கொழுந்து

இசை: தேவா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு

இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

உள்ளங்கை ரேகை எந்தன் தோகை பேரை எழுதட்டும்

உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்

கண்ணுக்கும் ரேகை உண்டு காண வேண்டும் வா ராசா

பொண்ணுக்குள் பூவும் உண்டு தேனும் உண்டு நான் ரோசா

அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே

ஆத்தாடி இளமையின் ரகசியம் விளங்குது விழிகளிலே

ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

என்னென்ன கோலம் உண்டு ஜாலம் உண்டு உன் கண்ணில்

ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்

தித்திக்கும் பாலும் கொம்புத்தேனும் கொண்டு நான் வாரேன்

ஒத்திகை தேவை இல்லை ஓடி வந்து நான் தாரேன்

வைகாசி பொறந்ததும் உனக்கொரு மங்கள சேதி வரும்

கைராசி இணைந்ததும் அதுக்கொரு வெற்றியும் தேடி வரும்

ஆதாரம் நீயாக தினம் ஒரு மணம் தரும் புன்னகைப்பூவே

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு

இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

No comments:

Post a Comment