Friday, July 30, 2010

கருப்பான கையாலே என்ன புடுச்சான்

திரைப்படம் : தாமிரபரணி (2006)


இசை : யுவன் சங்கர் ராஜா

இயக்கம் : ஹரி

பாடியவர்கள் : கோரஸ்,ரஞ்சித்,ரோஷிணி

நடிப்பு : விஷால்,பானு,நதியா,பிரபு



வரிகள்:



பெண்

கருப்பான கையாலே என்ன புடுச்சான்

காதல் என் காதல் பூப்பூக்குதம்மா.............

மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா

பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா

அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா



ஆண்

செவப்பாக இருக்காளே கோவப்பழமா

கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா

அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா

பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா

இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா (கருப்பான)



பெண்

வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே

அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே



ஆண்

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே

ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே



பெண்

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்

காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா



ஆண்

செவப்பாக



பெண்

ஆஹா



ஆண்

இருப்பாளே



பெண்

ஆமா



ஆண்

செவப்பாக ஆ................. ஆ................. (செவப்பாக)



ஆண்

ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு

அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு



பெண்

ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு

நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு



ஆண்

பூ மயிலே எத்தனையோ பூவு இருக்கு

ஒன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு

யம்மா ஆத்தா ஏஹேய் ஹேய் (கருப்பான)


http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.8954/music_director.1046/

No comments:

Post a Comment