Wednesday, July 28, 2010

சட்டி சுட்டதடா கை விட்டதடா

படம்: ஆலயமணி


பாடல்: கண்ணதாசன்

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்: T.M.S



சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா



பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதில் மிருகம் இன்று ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா

அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா



சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா



ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா

தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா

தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா - மனம்

சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கண்டதடா



சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா



எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா

இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா



மனம்சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

No comments:

Post a Comment