படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிர் என் மூச்சாகி வா
(ஜன்னல்..)
ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே
(என்ன..)
வாசமே வாசமே
வாசமே வாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டு கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
(ஜன்னல்..)
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
(இடது..)
அறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் அதை கண்டேன்
இயற்கை கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
ஸ்வாசமே ஸ்வாசமே
இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திட செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம்தான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விழுந்துவிட்டேனே
வாசமே வாசமே
(என்ன..)
(ஜன்னல்..)
http://www.youtube.com/watch?v=l4pNqGc9s8w
No comments:
Post a Comment