Wednesday, July 28, 2010

பெம்மானே பேர் உலகின் பெருமானே

படம்: ஆயிரத்தில் ஒருவன்


இசை: GV பிரகாஷ்

பாடியவர்கள்: நவீன், PB ஸ்ரீநிவாஸ்

பெம்மானே பேர் உலகின் பெருமானே

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

பெய்யோனே என்னுருகி வீழ்கின்றோம்

வேங்கழிந்து வாழ்கின்றோம் விதி தானோ



குலம் பெயர்ந்தோம் புவி இழந்தோம்

புலன் கழிந்தோம் அழுதழுது

உயிர் கிழிந்தோம் அருள்வானே

(பெம்மானே..)



சோரில்லை சொட்டு உலகின் பெருமானே

தொண்டையிலும் பால் இல்லை குன்றையோனே

மூப்பானோர் முன் வழிந்து முடம் ஆணோம்

மூச்சு விடும் பிணமானோம் முக்கலோனே

ஊந்தைதோம் ஊன் உருகி உயிர் ஓய்ந்தோம்

ஒரே இலையில் வாழ்கின்றோம் உடல் கோனே



தீராது ஐம்புலனும் தீராது

பொன்னுலகம் சேராது போக மாட்டோம்

என் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை

பிறர் ஏதும் தீண்டாமல் வேக மாட்டோம்

தாழ்ந்தாலும் செங்கதிர் வீழ்ந்தாலும்

தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்



பொன்னார் மேனியே வெம்ப்புலித்தோல் உடுத்தவனே

இன்னோர் தோள் கருதி நீ என் தோள் உரிப்பதுவோ

முன்னோர் பார்க்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே

பின்னோர் என்பவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

(பெம்மானே..)

No comments:

Post a Comment