மன்னிப்பாயா
பாடல் : தாமரை
இசை : A R ரஹ்மான்
பாடிய்வர்: ஸ்ரையா கோஷால், ரஹ்மான்
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கின்னே கரைத் தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே...
ஒருநாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்றுப் புதைத்தேனே
மன்னிப்பாயா, மன்னிப்பாயா, மன்னிப்பாயா
ஒருநாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்றுப் புதைத்தேனே
மன்னிப்பாயா, மன்னிப்பாயா, மன்னிப்பாயா
மன்னிப்பாயா, மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால் தான் கலைஞன் ஆனேன்னே
தொலைத் துரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும், மேலும் உருகி, உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ...உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைத் தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான்
தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் களங்கரை விளக்கமே
ஒருநாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்றுப் புதைத்தேனே
மன்னிப்பாயா, மன்னிப்பாயா, மன்னிப்பாயா
மன்னிப்பாயா, மன்னிப்பாயா
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒருநாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்றுப் புதைத்தேனே
மன்னிப்பாயா, மன்னிப்பாயா, மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால் தான் கலைஞன் ஆனேன்னே
தொலைத் துரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும், மேலும் உருகி, உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
மேலும், மேலும் உருகி, உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓ...உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
No comments:
Post a Comment